கொடுங்கையூர் கொடுஞ்சாவிற்கு கமல்ஹாசன் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தும் மின் வயர்கள் அறுந்தும் உள்ளதால் ஆபத்தான சூழ்நிலையை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் இன்று காலை சகோதரிகள் இருவர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத அந்த சிறுமிகள் மின்கம்பியை தெரியாமல் மிதித்ததால் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதனையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த சகோதரிகள் இருவரையும் உடனடியாக அருகில் உள்ளவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி இருவரும் சிலமணி நேரத்தில் உயிரிழந்தனர். மின்வயர் அறுந்து ஆபத்தான நிலையில் இருந்ததை சிலமணி நேரங்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ளவர்கள் மின்வாரிய ஊழியர்களிடம் புகார் செய்திருந்தும் மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இரண்டு பிஞ்சு உயிர்கள் பலியாகியுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமைச்சர் தங்கமணி கூறியபோது, 'இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த கொடுமையான சம்பவம் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியபோது, 'கொடுங்கையூர் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் போதாது இனியும் நிகழாதிருக்க ஆவனவெல்லாம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com