நக்கீரன் கோபால் கைது: கமல்ஹாசன் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நிர்மலாதேவி விவகாரம் குறித்து நக்கீரன் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் தமிழக கவர்னர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டிருந்ததால், கவர்னர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.
நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஆதாரமில்லாமல் தனிப்பட்ட ஒருவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளதால் இந்த கைது நடவடிக்கை சரிதான் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நக்கீரன் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஊடகங்களின் சுதந்திரத்தில் கை வைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதற்கு ஒப்பாகும்' என்று கமல்ஹாசன், இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments