உப்புமாவையே சாப்பிட்டுகிட்டு இருந்திருக்கலாமே.. அர்ச்சனாவையும் அர்ச்சனை செய்த கமல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் மற்றும் விஷ்ணு சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கு உப்புமா சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா திடீரென அந்த சண்டையில் நுழைந்தார். அதன் பிறகு நிக்சன் மற்றும் அர்ச்சனா சண்டையாக அது மாறியது.
குறிப்பாக அர்ச்சனா, வினுஷா மேட்டரை வெளியே எடுத்ததும் நிக்சன் பயங்கர ஆத்திரமானார் என்பதும், அதன் பிறகுதான் அவர் சொருகிடுவேன் உள்பட சில பேசக்கூடாத வார்த்தைகளையும் பேசினார்.
இது குறித்து கமல்ஹாசன் அர்ச்சனாவை கண்டிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ’வினுஷா பிரச்சனை என்ன? என்று கமல் கேட்கும்போது ’வெளியே போய் அந்த பெண்ணின் காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை நான் உணர்ந்துவிட்டேன்’ என்று நிக்சன் கூறுகிறார்.
இதனை அடுத்து, ‘நான்கு வாரமாக வினுஷா மேட்டரை பேசாமல் இருந்த நிலையில் திடீரென பேசியது ஏன்? என்று அர்ச்சனாவிடம் கமல் கேட்க அதற்கு அர்ச்சனா அமைதியாக இருந்தார். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக வினுஷா மேட்டரை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
அந்த பொண்ணு நீங்களும் ரொம்ப நெருக்கமாக இருந்ததால்தான் ஐஷு வெளியே போய்விட்டார் என்று சொன்னீர்கள் இல்லையா, அவங்களும் இப்போது இல்லை உங்களுக்கு சீட்டு சேராத போது ஒரு ஜோக்கரா அவங்கள நீங்க யூஸ் பண்ணிக்க கூடாது என்று கூறிய பின்னர், ’நீங்கள் அந்த கான்வர்சேஷனில் இல்லாத போது எதுக்கு நீங்க உள்ள போறீங்க? உப்புமா நல்லா இருந்தா உப்புமாவையே சாப்பிட்டு இருந்திருக்கலாமே’ என்று கண்டித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com