மக்கள் எதுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பாக்கணும்.. வெறுப்பில் பேசிய கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Sunday,December 10 2023]

இந்த சீசனில் சுவராசியம் எதுவும் இல்லாததால் எதற்காக மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் வெறுப்பில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நிக்சன், விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டவர்களை கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி மீண்டும் ஒருமுறை அநாகரிகமாக பேசினால் ரெட் கார்டு வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவிலும் ஒட்டுமொத்த போட்டியாளர்களை விமர்சனம் செய்துள்ளார். ’இந்த வீட்டில் என்டர்டைன்மென்ட் இருக்கா? ஒரு டாஸ்க்கையாவது நீங்கள் சுவாசிமாக செய்கிறீர்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. எந்த ஆசையுடன் நீங்கள் வந்தீர்களோ அதை மறந்துவிட்டு, தடம் மாறி வன்ம போதையில் இருந்து விடுபட மாட்டீர்கள்.

ஒருத்தரை ஒருத்தர் நீங்களே மதிக்கிறது இல்லை, இவர்கள் எதற்காக உங்களை மதிச்சு இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்? என்று கமல்ஹாசன் சொன்னபோது போட்டியாளர்கள் கைதட்டினார்கள்.

அப்போது ’கை தட்டாதீர்கள், முட்டாளுக்கு எதுக்கு முட்டை’ என்று சாப்பிடும் போது கூட வன்மத்தை கக்கும் இந்த நிகழ்ச்சியில் என்டர்டைன்மென்ட் எப்படி வரும்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து இனிமேலாவது மீதமிருக்கும் 30 நாட்களில் என்டர்டைன்மென்ட் வழங்கும் வகையில் போட்டியாளர்கள் விளையாடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.