close
Choose your channels

பிரபல நடிகரின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்.. மாஸ் தகவல்..!

Friday, August 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் ’இந்தியன் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது எச் வினோத் இயக்க இருக்கும் படத்திற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அதற்கு இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்கும் அவர் செல்லவுள்ளார்.

அந்த வகையில் கமல்ஹாசன் பிசியாக இருக்கும் நிலையில் ஒரு படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுதான் சிம்பு நடிக்க இருக்கும் ’எஸ்டிஆர் 48’ படம்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த படத்தில் உடல் அளவு பிட் ஆவதற்காக சிம்பு வெளிநாட்டுக்கு சென்று இருந்தார் என்பதும் அதன் பிறகு உத்வேகத்துடன் திரும்பி வந்து மலேசியாவில் நடந்த யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’எஸ்டிஆர் 48’ படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் இது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட செய்தி என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment