கன்ஃபக்சன் ரூமுக்கு கூப்பிடுவோமா? டுவிஸ்ட் வைத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 82 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்களின் வருகையால் சென்டிமென்ட் மயமாக காட்சி அளித்தது என்பதும் பிக்பாஸ் ஆரம்பித்ததிலிருந்தே கடந்த வாரம் மட்டும் தான் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமலஹாசன் அனைத்து போட்டியாளர்களையும் கன்ஃபக்சன் ரூமுக்கு கூப்பிடுவோமா? என டுவிஸ்ட் வைத்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’பாச மழை பெய்து ஓய்ந்தது வீட்டில், ஆனால் மழைக்காலம் முடிந்தவுடன் வெயில் காலம் வந்துதான் ஆக வேண்டும். அவைமரியாதை கருதி அவர்கள் மனம் கோணாமல் இத்தனை நாள் வரையில் பேசிக் கொண்டு வந்தேன். ஆனால் உள்ளதை உள்ளபடியே உங்களுக்கு சொல்ல வேண்டுமென்றால் உள்ளே தான் போகவேண்டும், கூப்பிடுவோம்’ என வைத்து கமல்ஹாசன் பேசியதிலிருந்து இன்றைய நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.