மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் குடும்பத்தின் முக்கிய நபர்..அதிர்ச்சி புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,July 31 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் குடும்பத்தின் முக்கிய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரரும் நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சாருஹாசன் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை புகைப்படத்துடன் சுகாசினி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து சாருஹாசன் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

நடிகர் சாருஹாசனுக்கு தற்போது 93 வயதாகும் நிலையில், வயது மூப்பு காரணமாக சோர்வாக இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனையில் சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு அதன் பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. தனது தந்தை தற்போது நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் நாங்கள் அனைவரும் அவரை அன்புடன் பார்த்துக் கொள்வதாகவும் சுகாசினி இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

More News

வயநாடு நிலச்சரிவு.. நிவாரண பணிக்கு களத்தில் இறங்கிய சசிகுமார் பட நாயகி..!

கேரள மாநிலம் வயநாடு அருகே திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில் பல தன்னார்வ தொண்டர்கள் தற்போது நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரசாந்தின் 'அந்தகன்' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.. புத்திசாலித்தனமான முடிவா?

பிரசாந்த் நடித்த 'அந்தகன்' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக

பெரிய தப்பை தடுக்க சின்ன தப்பு பண்றது தப்பே இல்லை.. 'ரகு தாத்தா' டிரைலர்..!

கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகு தாத்தா' என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வழியாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆன்மீக உலகில் புதிய பரிமாணம்: ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் ஆன்மீகக்ளிட்ஸ் பேட்டி

பிரபல ஆன்மீக அறிஞர் ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டி, ஆன்மீக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினிக்கு மனைவியாக நடிக்கும் தனுஷுக்கு மனைவியாக நடித்த நடிகை.. அவரே சொன்ன தகவல்..!

தனுஷுக்கு மனைவியாக நடித்த நடிகை தற்போது ரஜினிக்கு மனைவியாக நடித்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.