அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன் ட்வீட்..!

  • IndiaGlitz, [Sunday,June 02 2024]

தனது அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவருக்கும் இன்று ஒரே நாளில் பிறந்தநாள் வருவதை அடுத்து தனக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டுள்ளதாக உலகநாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் இன்று தங்களது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் இளையராஜா, மணிரத்னம் என இரண்டு ஜாம்பவான்களுக்கு பிறந்த நாளை அடுத்து தனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவருக்கு ஒரு இருப்பதாவது:

இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு.

மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது.

இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்... பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன்.

எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க.

More News

துக்கம் காரணமாக இன்று பிறந்த நாளை கொண்டாடவில்லை: இளையராஜா பேட்டி..!

இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சற்றுமுன்

இந்தியாவை தமிழன் ஆளும் நாள்.. உதயநிதியால் தான் அடுத்த கட்டம்.. 'இந்தியன் 2' விழாவில் கமல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இ

தமிழ் சீரியல் நடிகை கர்ப்பம்.. வைரல் புகைப்படம்.. ரசிகர்கள் வாழ்த்து..!

சன் டிவி, விஜய் டிவி உள்பட முக்கிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியலில் நடித்த நடிகை கர்ப்பம் என்று அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

12 ராசிகளுக்கான திருமால் மந்திரங்கள்!

திருமால் 12 ராசிகளுக்கும் தனித்தனி மந்திரங்களை வழங்கியுள்ளார். ஒவ்வொரு ராசிக்கும் உரிய மந்திரத்தை ஜபிப்பதன்

'சூர்யா 44' படத்தின் நாயகி இவர் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அந்தமானில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சூர்யா