close
Choose your channels

500 படங்கள் நடித்த நடிகரின் சாதனையை முறியடியுங்கள்: மோகன்லாலுக்கு வாழ்த்து கூறிய கமல்..!

Tuesday, May 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

400 படங்கள் என்ற மைல்கல்லை தொட்டுள்ள மோகன்லால் 500 படங்கள் நடித்த நடிகரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மோகன்லால் பிறந்தநாளுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், ‘40 ஆண்டுகளாக பல விமர்சனங்கள் மற்றும் விவேகமான பார்வையாளர்கள் மத்தியில் நடிப்பை தொடர்ந்து கொண்டிருப்பது ஒரு பெரிய சாதனை.

400 படங்கள் இதுவரை நடித்து விட்டீர்கள், இந்த எண்ணிக்கையை பார்த்து சிலர் அவநம்பிக்கையாக கூட கூச்சலிடக்கூடும். ஆனால் திரு பிரேம் நசீர் அவர்களின் 500 படங்களின் சாதனையை நீங்கள் முறியடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’உன்னைப்போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர் என்பதும் கமல்ஹாசன் அந்த படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரிலும் மோகன்லால் காவல்துறை உயர் அதிகாரி கேரக்டரிலும் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment