தனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய மாநில அரசுகள் மீது பாரபட்சமின்றி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவரது ஒவ்வொரு விமர்சனங்களும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் மக்களுக்கு நல்லது செய்யும் முதல்வர்களை அவர் பாராட்டவும் தயங்கியதில்லை. கேரள முதல்வரும் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியவர்களின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவ்வப்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவரான கேரள முதல்வர் பினாரயி விஜயன் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது சமூக வலைப்பக்கத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இரத்தக் கறை படிந்த சட்டையுடன் பேசுவதன் மூலம் புயலை உருவாக்கியவர், தனது மாநிலத்தை நாட்டின் புகழ் பெற்ற மாநிலமாக மாற்றியவர். கேரள முதல்வர் அவர்கள் எங்களுடன் இணக்கமாக இருப்பவர், எங்களை சகோதரர்கள் என்று அழைப்பவர், எங்களுக்காக எல்லைகளை திறந்து வைத்திருப்பவர், அப்படிப்பட்ட எங்கள் தோழருக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
Then, he created a storm by talking with a bloodstained shirt. Now, he has made his state the object of adulation in the country. The CM of Kerala emphasised our bond, calling us brothers, keeping the borders open. Our Heartfelt birthday wishes to our comrade @vijayanpinarayi
— Kamal Haasan (@ikamalhaasan) May 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments