அன்புத்தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்: வைரல் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அன்பு தம்பிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அவரது டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புத் தம்பி உதயநிதிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ட்விட் செய்துள்ளார். அவரது டுவீட்டில் கூறியிருப்பதாவது:
சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.
கமலஹாசன் நடித்து தயாரித்த ’விக்ரம்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அடுத்ததாக கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2’ படத்தையும் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே. மேலும் கமல்ஹாசனின் 234வது படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், @RedGiantMovies_ நிறுவனத்தின் தலைவரும், எங்கள் @RKFI நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான @Udhaystalin அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com