கோலையுங்குடியையும் உயரச்செய்வோம்: கமல்ஹாசனின் பிறந்த நாள் செய்தி

  • IndiaGlitz, [Tuesday,November 07 2017]

உலக நாயகன் கமல்ஹாசனின் 63வது பிறந்த நாள் இன்று. இன்றைய தினம் கமல்ஹாசனின் ரசிகர்கள் பல்வேறு பிறந்த நாள் நிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ள நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பிறந்த நாள் செய்தியை கவிதை வடிவில் தனது ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.

நாளையென்பது மற்றொரு நாளே
வேலை கிடக்குது ஆயிரமிங்கே
கோலையுங்குடியையும் உயரச்செய்வோம்
காலையிலேயே புதுயுகம் செய்வோம்

என்று கவிதை வடிவில் தனது ரசிகர்களுக்கு செய்தியாக தெரிவித்துள்ள கமல், 'நான் என் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடியும் நண்பர்கட்கு... என்று குறிப்பிட்டுள்ளார்

கமல்ஹாசனின் இந்த பிறந்த நாள் டுவீட், டுவிட்டரில் டிரெண்டிங்கில் வந்தது மட்டுமின்றி அதிக லைக்ஸ்களையும் பெற்று வருகிறது. மேலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களது தலைவனுக்கு பிறந்த நாளை தெரிவித்து வருகின்றனர்.

More News

சென்னையை கலக்கும் கமல்ஹாசனின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள்

இந்த ஆண்டு கமல்ஹாசனின் ஸ்பெஷல் பிறந்த நாள். அரசியல் களம் குதிக்கும் பிறந்த நாள் என்பதால் அரசியல் ஸ்டைலில் அவருடைய ரசிகர்கள் போஸ்டர்களை சென்னை நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்

ரோஸ் டெய்லருக்கு ஆதார் கிடைக்குமா? சேவாக் கிண்டல்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக், ஓய்வு பெற்றாலும் தனது நகைச்சுவையான டுவீட்டுக்கள் மூலம் அவ்வப்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருப்பார்

வைகோ கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டாரா? வைரலாகும் வீடியோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகுத்தறிவு கொள்கை கொண்டவர் என்றும், அவர் எந்த மதத்தையும் சாராதவர் என்றும் தான் தமிழக மக்கள் இன்று வரை நம்பிக்கொண்டிருக்கின்றார்.

அரசியலுக்கு ரஜினியும் வரமாட்டார், கமலும் வரமாட்டார்: சாருஹாசன்

கமல்ஹாசன் நேற்று தனது ரசிகர்களை சந்தித்தபோது, 'நான் அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் இனியும் என்னை பார்த்து அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று கேட்க வேண்டாம்'

எங்களை மேலும் நொந்து போக வைக்காதீர்கள். ஆட்சியாளர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் கார்ட்டூன் ஒன்றை வரைந்திருந்தார்.