சென்னையை கலக்கும் கமல்ஹாசனின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று மற்ற பெரிய ஸ்டார்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் போல போஸ்டர்கள் பெரிதாக இருக்காது. ஆனால் இந்த ஆண்டு கமல்ஹாசனின் ஸ்பெஷல் பிறந்த நாள். அரசியல் களம் குதிக்கும் பிறந்த நாள் என்பதால் அரசியல் ஸ்டைலில் அவருடைய ரசிகர்கள் போஸ்டர்களை சென்னை நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். அதில் உள்ள வாசகங்களிலும் அரசியல் நெடி இருப்பதால் போஸ்டரை திரும்பி பார்க்காமல் யாரும் செல்ல முடியாது.
ஆளப்போறார் ஆண்டவர், தமிழகமே விரும்பும் தலைமையே, எங்கள் நற்பணி இயக்கத்தின் தலைவரே, மக்களின் பிக்பாஸ் அவர்களே, உலகம் அறிந்த அறிவாளி-உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி, உலகமே வியந்து பார்க்கும் உலக நாயகரே, போன்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் சென்னை நகரை கலக்கி வருகின்றன.
தற்போதைய அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் சிம்மசொப்பனமாக கமல் திகழப்போகிறார் என்பதற்கு இந்த போஸ்டர்கள் ஒரு டிரைலர்தான், இனிமேல்தான் மெயின் பிக்சர் இருக்குது என்று கமல் ரசிகர்கள் கூறி வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments