உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களது வாழ்த்துக்கள் குறித்த பதிவுகள் இதோ:
முதலமைச்சர் முக ஸ்டாலின்: பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் தொண்டு சிறக்க விழைகிறேன்!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை.
கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!
பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) November 7, 2024
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் - @maiamofficial-இன் தலைவர் @ikamalhaasan அவர்களின்… pic.twitter.com/eOmJaACRqg
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை.
— Udhay (@Udhaystalin) November 7, 2024
கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் @ikamalhaasan சாருக்கு என் இனிய பிறந்த…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments