உங்களுக்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைக்கும்: மோடிக்கு கமல் கூறும் ஐடியா!
- IndiaGlitz, [Wednesday,October 02 2019]
பிரதமர் மோடியும் சீன அதிபரும் வரும் 11ஆம் தேதி மாமல்லபுரம் வரவிருக்கும் நிலையில் பிரதமருக்கும் சீன அதிபருக்கும் பேனர் வைக்க அனுமதி வேண்டும் என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த மனு குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை தெரிவித்து அதனை பிரதமரின் டுவிட்டர் பக்கத்திற்கு டேக் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: பேனர் கலாச்சாரத்தால் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மறைவை இன்னும் தமிழக மக்கள் ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். இந்த நிலையில் உங்களுடைய வருகைக்காக பேனர் வைக்க தமிழக அரசு நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டுள்ளது.
இம்மாதிரியான விளம்பரங்களை வேண்டாம் என நீங்கள் முடிவெடுத்தால் பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் படியை நீங்கள் எடுத்ததாக கருதப்படும். இது தமிழர்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பையும் மரியாதையையும் அளிக்கும். இதுவே உங்களுக்கு பேனரை கிடைக்கும் மிகப்பெரிய விளம்பரம் ஆகும், ஜெய்ஹிந்த்’ என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமலின் ஐடியாவை பிரதமர் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
https://igimage.indiaglitz.com/tamil/home/kamalmodi021019_1.jpgIf you act as a pioneer in taking the first step to put an end to this haphazard banner culture, it will reflect your concern towards the sentiments of Thamizhians, and that in itself will garner you the greatest publicity possible. Jai Hind! (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) October 2, 2019