இது எவ்வகை நீதி? அரசிடம் மீண்டும் கேள்வி கேட்ட கமல்ஹாசன்
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வப்போது தனது டுவிட்டரில் ஆட்சியாளர்களை எதிர்த்து கேள்விகளை எழுப்பி வருகிறார். அவருடைய கேள்விகளுக்கோ, பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்திற்கோ இன்னும் யாரும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் மீண்டும் ஒரு கேள்விக்கணையை அரசுக்கு எழுப்பியுள்ளார். அவர் கேட்ட கேள்வி இதுதான்:
ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? கமல்ஹாசனின் இந்த கேள்விக்கு அரசிடம் இருந்து பதில் வருமா? அல்லது வழக்கம்போல் அமைதிதானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கடல் பகுதியில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ந்தேதி முதல் ஜூன் மாதம்14 ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த தடை இந்த ஆண்டும் விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?
— Kamal Haasan (@ikamalhaasan) April 18, 2020