இது எவ்வகை நீதி? அரசிடம் மீண்டும் கேள்வி கேட்ட கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வப்போது தனது டுவிட்டரில் ஆட்சியாளர்களை எதிர்த்து கேள்விகளை எழுப்பி வருகிறார். அவருடைய கேள்விகளுக்கோ, பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்திற்கோ இன்னும் யாரும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் மீண்டும் ஒரு கேள்விக்கணையை அரசுக்கு எழுப்பியுள்ளார். அவர் கேட்ட கேள்வி இதுதான்:

ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? கமல்ஹாசனின் இந்த கேள்விக்கு அரசிடம் இருந்து பதில் வருமா? அல்லது வழக்கம்போல் அமைதிதானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கடல் பகுதியில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ந்தேதி முதல் ஜூன் மாதம்14 ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த தடை இந்த ஆண்டும் விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நான் பஞ்சாயத்து பண்ண வரல்ல: தல, தளபதி சண்டை குறித்து சாந்தனு

கொரோனா பரபரப்பு நேரத்தில் தல அஜித் ரசிகர்களும், தளபதி விஜய் ரசிகர்களும் டுவிட்டரில் நெகட்டிவ் டேக் போட்டு சண்டை போட்டு வருவதை நடிகை கஸ்தூரி உள்பட பலர் கண்டித்து வருகின்றனர்.

ஊரடங்கின் எதிரொலி; பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துள்ளது!!! தேசிய மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் மார்ச் 23 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'ஹீரோ'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே

சூர்யா-கார்த்தி ரசிகர்களுக்கு பிரபல தயாரிப்பாளரின் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி பசியால் வாடுகின்றனர்.

மனைவி, குழந்தைகளுக்கு அரிசி-பருப்பு வாங்கி கொடுத்துவிட்டு தற்கொலை செய்த பெயிண்டர்

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நூற்றுக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும்