கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார், காட்டுவீர்களா? கமல் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் மற்றும் தேர்தல் பிரச்சாரம் ஆகிய இரண்டையும் மாறி மாறி செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
முதல்கட்ட பிரச்சாரத்தில் மதுரை மற்றும் தென் மாவட்டங்களிலும், இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் நேற்று முதல் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். கமல்ஹாசன் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் பேராதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எம்ஜிஆரின் பெயரை கமல்ஹாசன் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தி வருவதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசன் எம்ஜிஆர் குறித்து ஒரு டுவிட்டை நேற்றிரவு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
இதுகாறும் 'அம்மா ஆட்சி' என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா? ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?! #நான்_கேட்பேன்
கமல்ஹாசனின் இந்த கேள்விக்கு அதிமுகவினர்களிடம் இருந்து பதில் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?! #நான்_கேட்பேன்
— Kamal Haasan (@ikamalhaasan) December 27, 2020
(2/2)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments