டாஸ்க்கில் நிக்சன் செய்த பிராடுத்தனம்.. போட்டு கொடுத்த அர்ச்சனா.. லெப்ட் ரைட் வாங்கிய கமல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைக்கப்பட்ட டாஸ்க்கில் நிக்சன் பிராடுத்தனம் செய்து வெற்றி பெற்றதாக ஏற்கனவே நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவை செய்த நிலையில் இன்று அது குறித்து கமல்ஹாசன் லெப்ட் ரைட் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து கமலஹாசன் கேள்வி எழுப்பிய போது ’கார்டில் மார்க் வைத்து விட்டார்கள் என்று அர்ச்சனா கூறிய நிலையில் ’ஒருவேளை அவ்வாறு மார்க் வைத்திருந்தால் அது யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்’ என்று கேட்க அதற்கு அர்ச்சனா அமைதியாக இருந்தபோது ’பிக் பாஸ்’ என கமல்ஹாசன் கூப்பிட்டார்
அப்போது அர்ச்சனா ’அப்போ நான் சொன்னது உண்மைதானா? மார்க் வைத்து விட்டார்களா? என்று கேட்க ’நான் ஒரு சந்தேகத்திற்காக பிக்பாஸ் வரைக்கும் கொண்டு போகிறேன்’ என்று கமல்ஹாசன் கூறுகின்றார்
இதனை அடுத்து விஜய் வர்மாவிடம் ’நீங்கள் ஜெயித்ததற்கு நான் தான் காரணம் என்று நீங்கள் ஒரு இடத்தில் சொன்னீர்களே’ என்று கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் விஜய் வர்மா அதிர்ச்சியுடன் நிற்கிறார். அதன்பிறகு நிக்சனிடம் ’என்ன சொல்லுங்கள்’ என்று கமல் கேட்க அதற்கு அவர் பதில் சொல்ல தொடங்குவது உடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது
இதற்கு முந்தைய இன்னொரு புரமோவில் ‘நீங்க எல்லாம் குரூப் குரூப்பா விளையாடுகிறீர்களா? என்று கமல்ஹாசன் கேட்க அப்போது விஷ்ணு ’மாயா பூர்ணிமா ஆகிய இருவரின் நோக்கம் என்ன என்று எனக்கு தெரியும்’ என்று கூறினார். அதன் பிறகு தினேஷ் மற்றும் விசித்ரா குறித்தும் விஷ்ணு கூறியவுடன் கமல்ஹாசன், ‘விசித்ரா அந்த டீம் தானே, அவங்க கோட்டையை மட்டும் ஏன் தொடவே இல்லை’ என்று கமல் கேட்க ’அந்த கோட்டை தானாக சரிந்து விடும் சார், நாம எதுவும் செய்ய வேண்டியதில்லை’ என்று விஷ்ணு பதிலடி கொடுக்கிறார்.
அப்போது கமல்ஹாசன் ’நான் உங்களை தனித்தனியாக விளையாடுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் நீங்கள் டீம் ஏ மற்றும் டீம் பி என்று விளையாடுகிறீர்கள்’ என்று வறுத்தெடுத்தார். மொத்தத்தில் கமலஹாசனின் இன்றைய எபிசோடு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com