கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு

  • IndiaGlitz, [Wednesday,November 15 2017]

பிறப்பு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சமீபத்தில் கேரள அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்து அதனை சுற்றறிக்கையாக வெளியிட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு கேரள மக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் கேரள முதல்வருக்கு நெருக்கமானவராக இருந்து வரும் கமல்ஹாசன் இந்த நடவடிக்கைக்கு தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'மீண்டும் கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை. உங்கள் சுற்றறிக்கை வரலாற்றுப்பூர்வமானது. நான் என் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிட மறுத்துவிட்டேன். என் மகள்கள் 21 வயதைக் கடந்த பிறகு ஸ்ருதி ஹாசன் இந்து மதத்தைத் தேர்வு செய்தார். அக்‌ஷரா ஹாசன் சாதி, மதம் இல்லாமல் வாழ முடிவெடுக்கலாம்'' என்று பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் கமல்ஹாசன் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் செய்ததை கேரள அரசு தற்போது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையை தமிழக அரசு எப்போது செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பசிக்கு மதமில்லை, விவசாயிகள் ஒன்றுகூட கமல் அழைப்பு

கமல்ஹாசனின் அரசியல் பாதை வித்தியாசமானது என்பதை அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியவரும். குறிப்பாக விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கமல்ஹாசன்.

குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழாவை கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்

இன்று நவம்பர் 14 குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்கால தூண்கள் என்பதால் அவர்களை பிரபலங்களும் போற்றியும் ஆசிர்வத்தும் வருகின்றனர்.

41 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த கவுதம்மேனனின் அடுத்த படம்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம் என்ற படத்தையும், தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தையும் இயக்கி வருகிறார்.

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு அளித்த கெளரவம்

ஆந்திர மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி - சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோர் பெயர்களில் திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

ஜெயலலிதா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா? மலையாள பத்திரிகை செய்தியால் பரபரப்பு

தமிழக மக்கள் இதுவரை ஜெயலலிதாவை மட்டுமே 'தலைவி' என்று கூறி வந்தனர். அவருக்கு அடுத்து தற்போது நயன்தாராவை அவரது ரசிகர்கள் 'தலைவி' என்று கூற ஆரம்பித்துள்ளதாக மலையாள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.