தமிழக காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!
- IndiaGlitz, [Thursday,January 28 2021]
தமிழக அரசையும் தமிழக காவல்துறையும் அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வரும் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
தமிழக அரசை மட்டுமின்றி தமிழக காவல்துறையையும் கமல்ஹாசன் அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் ஈரோடில் மக்கள் நீதி மய்யம் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சென்றிருந்த போது அவருடைய பேனர்களை காவல்துறையினர் அகற்றியதற்கு கமல்ஹாசன் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவரே தமிழக காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
சமீபத்தில் வடமாநில கொள்ளையர்கள் சீர்காழியில் மிகப்பெரிய படுபாதக செயலை செய்த நிலையில் ஒரே நாளில் அந்த கொலை, கொள்ளையர்களை தமிழக காவல்துறை கண்டுபிடித்து கைது செய்தது. இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி கமல்ஹாசனும் தமிழக காவல்துறையை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவு செய்த வீட்டில் கூறியிருப்பதாவது: வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால், வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட வேண்டும்.
வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால், வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 28, 2021