தேவர் மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21 முதல் அரசியல் களத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து குதிக்கவுள்ள நிலையில் இன்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் அளித்த பதில்களில் இருந்து ஒரு தொகுப்பு:
‘நான் இங்கு தலைவனாக வரவில்லை; தலைவர்களைச் சந்திக்கவே வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை. நீங்கள் வாருங்கள் என்று கூறவே வந்துள்ளேன். நாட்டு நடப்பைக் கவனிப்பது மாணவர்களின் கடமை.
சும்மா இருங்கள், எதுவும் பேசக் கூடாது என்பது ஜனநாயகமா. வாக்குகள் என்பது வியாபாரம் செய்வதற்கல்ல. அவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
திரையுலகில் கால்பதிக்கும்போது நான் இயக்குநராக ஆசைப்பட்டேன். ஆனால், இயக்குநர் பாலச்சந்தர் என்னை மாற்றினார்.
அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை மாணவர்கள் பார்க்க வேண்டும். நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் நான்.
அமைதியான முறையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்ற முறையில் காந்திதான் எனக்குப் பிடித்த தலைவர். அதேபோல், கமராஜர், பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களையும் எனக்குப் பிடிக்கும்.
சாத்தியம் என்பது சொல் அல்ல செயல். அன்பே சிவம், வறுமையின் நிறம் சிவப்பு மற்றும் தேவர் மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. பத்மாவத் படத்தின் பெயரால் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது
இவ்வாறு கமல்ஹாசன் கூறினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments