நான் போலி பகுத்தறிவாளனா? தமிழிசைக்கு கமல் பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், கமல்ஹாசன் போலி பகுத்தறிவாளர் என்றும், அமாவாசை தினத்தில் கட்சி ஆரம்பித்து, அமாவாசை தினத்தில் கொடியேற்றுகிறார் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். தமிழிசையின் இந்த குற்றச்சாட்டுக்கு கமல்ஹாசன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
என்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது என்றும், நான் பகுத்தறிவாளன் தான். ஆனால் என்னுடைய நோக்கம் ஏழ்மையையும், ஊழலையும் ஒழிப்பதுதான்,, மூட நம்பிக்கைகளை ஒழிப்பது அல்ல என்று கூறினார். மேலும் தன்னை ஆழ்வார் பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒரே நேரத்தில் சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளதாகவும் கமல் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout