ரெட் கார்டுக்கு பஞ்சமே இல்லை.. நிறைய இருக்கும்.. விசித்ராவுக்கு வேற லெவல் பதில் கொடுத்த கமல்ஹாசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பை அநியாயமாக விரட்டிய மாயா, பூர்ணிமா கும்பலுக்கு இன்று கமல்ஹாசன் சரியாக பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக அடுத்தடுத்து அவர் பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சற்று முன் வெளியான மூன்றாவது புரமோவில் பூர்ணிமாவிடம் உங்களுக்கு ஏதாவது கம்ப்ளைன்ட் இருக்கிறதா என்று கமல்ஹாசன் கேட்க அதற்கு விசித்ரா ’நீங்கள் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை அனுப்பி விட்டீர்கள், போனவாரம் ஃபுல்லா எங்களுக்கு அது மாதிரி ஒரு பிரச்சனை இருந்தது, அப்போ பெண்களுக்கு ஃப்ரீயா விட்டுவிடுங்களா சார் என்று கேட்க அதற்கு கமல்ஹாசன், ‘இல்லை இல்லை ரெட் கார்டு நிறைய இருக்கு, அதுக்கு பஞ்சமே இல்லை என்று கூறினார்.
இதனை அடுத்து ’என்னை மரியாதை இல்லாமல் நடத்தினார்கள், அதுக்கு சாரி இல்லையா சார்’ என்று கேட்க ’அவங்க சாரியை எல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா? நான் நம்பல என்று கூறி ஏன் சொல்றேன் என்று கேட்டு குறும்படம் போடச் சொன்னார்.
மொத்தத்தில் கமல்ஹாசன் இன்று ஃபுல் ஃபார்மில் இருப்பதை பார்த்து மாயா குரூப் அதிர்ச்சி அடைந்துள்ளது மூன்று புரமோக்களில் இருந்து பார்க்க முடிந்தது.
#Day41 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 11, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/U7Ix5wducK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments