நிஜ சந்திரனை அவர்கள் பார்த்தது கிடையாது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கமல் பதில்

  • IndiaGlitz, [Friday,September 28 2018]

தமிழகத்தில் புதிது புதிதாக கட்சிகள் தோன்றுவதாகவும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல புதிய கட்சிகள் அதிகபட்சம் நான்கு அமாவாசைகள் தாண்டாது என்றும் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருந்தார்

அமைச்சரின் இந்த கருத்துக்கு இன்று பதிலடி கொடுத்த கமல்ஹாசன், அமாவாசை பற்றி பேசியவர்கள் நிஜ சந்திரனை பார்த்தது கிடையாது' என்று கூறினார்.

மேலும் அமைச்சரின் கருத்துக்கு நடிகையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஆட்சியில் இருப்பவர் சற்று அறிவுப்பூர்வமாக பேசினால் சிறப்பாக இருக்கும்! அமைச்சர் என்ற ஆணவமோ? எங்களுக்கு நாள் குறிக்க நீங்கள் யார்? உங்கள் ஊழலுக்கு 'பால்' , 2 அல்லது 4 அமாவாசையிலோ நடக்கும்! வெயிட் அண்ட் வாட்ச்' என்று பதிவு செய்துள்ளார்.

More News

வனிதா விஜயகுமாருடன் நெருக்கம் குறித்து நடன இயக்குனர் ராபர்ட் விளக்கம்

கடந்த சில நாட்களாக நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் பங்களாவை வாடகை விட்ட விவகாரம் குறித்து பரபரப்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சற்றுமுன்னர் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

சபரிமலை கோவில் தீர்ப்பு குறித்து கமல், குஷ்பு கருத்து

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்ற அமர்வு இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்கிங்க: அனந்த் வைத்தியநாதன் கேட்ட கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இன்னும் இரண்டு நாட்களில் நெருங்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட ரித்விகாதான் வின்னர் என்பது உறுதியாகியுள்ளது.

செக்க சிவந்த வானம்: முதல் நாளில் செய்த அபார வசூல்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் என நான்கு முன்னணி நடிகர்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.