இந்த தேதியில் ஒரு சூப்பர் அப்டேட்.. 'தக்லைஃப்' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கமல்..!

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், சிம்பு, நாசர், அபிராமி, வையாபுரி உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் தான் சிம்பு இணைந்தார் என்றும் சிம்பு இணைந்தது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை என்றாலும் அவர் டெல்லி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற செய்தி அவர் இந்த படத்தில் இருப்பதை உறுதி செய்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வரும் 8ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தில் சிம்பு இணைந்தது குறித்து அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினம் சிம்புவின் மாஸ் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் மே 8ஆம் தேதி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் அசோக் செல்வன் இணைவதாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து அறிவிப்பும் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.