வெளியாகிறது சிம்பு கேரக்டர் வீடியோ.. கமல் வெளியிட்ட 'தக்லைஃப்' வீடியோவில் ட்விஸ்ட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் நாளை இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக நேற்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் அதே பக்கத்தில் நாளை காலை 10 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோவில் அந்த அறிவிப்பு சிம்பு கேரக்டர் குறித்த வீடியோ என்று மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் Sigma Thug Rules என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதில் STR ஆகிய மூன்று எழுத்துக்களும் பெரிதாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து சிம்புவை தான் STR என்று மறைமுகமாக கமல் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. எனவே நாளை இந்த படத்தில் புதிதாக இணைந்த சிம்பு கேரக்டர் குறித்த வீடியோ தான் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதால் அந்த வீடியோவை வரவேற்க சிம்பு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், அசோக்செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், வையாபுரி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Its time for a New Beginning, let’s welcome the New Thug Tomorrow at 10am#Ulaganayagan #KamalHaasan #NewThugInTown @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @trishtrashers @abhiramiact #Nasser @C_I_N_E_M_A_A @AishuL_ @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_… pic.twitter.com/4xDFPxxiPc
— Raaj Kamal Films International (@RKFI) May 7, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments