கோட்' படம் பார்க்க வரும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. சூப்பர் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'கோட்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'கோட்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என்று கருத்து கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படம் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 'கோட்’ திரைப்படம் வெளியான திரையரங்குகளில் இடைவேளையின் போது சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ படத்தின் டிரைலர் வெளியாகும் என சற்றுமுன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 'கோட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ள நிலையில் கூடுதலாக ஒரு இன்ப அதிர்ச்சியை கமல்ஹாசன் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
From the Battlefield to Big screen!
— Raaj Kamal Films International (@RKFI) September 5, 2024
Celebrate #Amaran teaser with #GOAT #AMARANxGOAT #AmaranOctober31 #TheGreatestOfAllTime #AmaranDiwali#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
A Film By @Rajkumar_KP@ikamalhaasan @Siva_Kartikeyan… pic.twitter.com/xiCwXAPxbV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments