'தக்லைஃப்' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்.. ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்த 'தக்லைஃப்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ரஷ்யா, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.
சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு 'தக்லைஃப்’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அனேகமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
Get Ready to Celebrate @ikamalhaasan Sir's Birthday, a Festive Celebration awaits on 7th Nov. #KHBirthdayCelebrations
— Raaj Kamal Films International (@RKFI) November 5, 2024
Watch out for the Thugs on Nov 7th at 11 am.
#KamalHaasan #SilambarasanTR #Thuglife@ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran… pic.twitter.com/eFb0S6JM3N
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments