தேர்தல் கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டது என்பதும் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்ய சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூடினர். கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து திமுக மற்றும் அதிமுக வுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி இல்லை என்பது உறுதியாகி உள்ளது. திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் வேறு எந்த கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே சமீபத்தில் இக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும், கூட்டணியை முடிவு செய்யும் முழு அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் திட்டவட்டம்@ikamalhaasan @maiamofficial pic.twitter.com/tLk0dxqLat
— Diamond Babu (@idiamondbabu) November 2, 2020
#MakkalNeedhiMaiam Party President #KamalHaasan at Party District Secretaries Meeting today@ikamalhaasan @maiamofficial pic.twitter.com/N1bTQpHfWS
— Diamond Babu (@idiamondbabu) November 2, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments