தேர்தல் கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டது என்பதும் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்ய சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூடினர். கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து திமுக மற்றும் அதிமுக வுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி இல்லை என்பது உறுதியாகி உள்ளது. திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் வேறு எந்த கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே சமீபத்தில் இக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும், கூட்டணியை முடிவு செய்யும் முழு அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

திரையரங்குகள் திறந்தாலும் புதுப்படங்கள் வெளிவராது: பாரதிராஜா அறிவிப்பால் பரபரப்பு!

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் பத்தாம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பாலாஜி-சனம்ஷெட்டி ஆவேச மோதல்: வேடிக்கை பார்க்கும் அர்ச்சனா குரூப்!

பாலாஜியின் பின்புறத்தில் சனம்ஷெட்டி, எட்டி உதைத்ததால் பொங்கி எழுந்த பாலாஜி ஆத்திரத்துடன்  பேசி வருகிறார். பாலாஜி மற்றும் சனம்ஷெட்டி ஆகிய இருவரும் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த

டிரெண்டான தோனியின் ஒரு வார்த்தை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் முடித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு கிளம்பு எதிர்ப்பு… உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரிக்குமா???

சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டங்களினால் இளைஞர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது

ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தால் இவ்வளவு உயிரிழப்பா? ஒட்டுமொத்த அமெரிக்காவையே கலங்க வைக்கும் தகவல்!!!

அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் அதிபர் தேலுக்கான தேர்தல் தேதி  நாளை என அறிவிக்கப்பட்டு இருந்தாலும்