4 தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட கமல் கட்சி வேட்பாளர்கள்

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 22ஆம் தேதி இந்த நான்கு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் முடிவடையும் கடைசி நேரத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இதோ

திருப்பரங்குன்றம் - சக்திவேல்

சூலூர் - ஜி.மயில்சாமி

அரவக்குறிச்சி - எஸ்.மோகன்ராஜ்

ஒட்டப்பிடாரம் - எம்.காந்தி

ஏற்கனவே இந்த நான்கு தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நான்கு தொகுதிகளிலும் நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும், இந்த நான்கு தொகுதி முடிவுகளும் வரும் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும்