நான் வேற மாதிரி பேசுவேன்.. மாயாவிடம் திடீரென கோபப்பட்ட கமல்ஹாசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடு பரபரப்பாக இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மாயா கேப்டன்சி குறித்து சக போட்டியாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
குறிப்பாக இன்றைய முதல் புரமோவில் மாயா கேப்டன்சி குறித்து கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்கள் புகார் அளித்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் மாயா இதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். ’என்னுடைய கேப்டன்சியில் என் மீதான விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், அதற்கு நான் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன், ஆனால் எனக்கு வெளியே நடந்த சில பர்சனல் வருத்தங்கள் தான் காரணம் என்று கூறினார்
அப்போது கமல், ‘எனக்கும் புரிகிறது, ஆனால் அதை நீங்கள் அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும், நீங்கள் சொல்லவில்லை என்றால் அவர்களுக்கு எப்படி தெரியும்? இதே மாதிரி பொறுமையாக நின்று பேசியிருந்தால், உங்கள் கேப்டன்சி மட்டுமல்ல உங்கள் நட்பு வட்டாரமும் அதிகரித்திருக்கும் என்று கூறினார்.
அதற்கு மாயா ’நான் வேலை செய்யுங்கள் என்று சொன்னாலே அதை தவறாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று மாயா கூறியபோது, ‘நான் சொன்னது வேற மாதிரி என்று சொல்லி இருந்தீங்கன்னா, நான் வேற மாதிரி பேசுவேன் என்று கமல் ஆத்திரத்துடன் கூறிய காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது.
மொத்தத்தில் இன்று மாயாவின் கேப்டன்ஷிப் குறித்து அவரை கமல் வறுத்தெடுக்கிறார் என்பது மட்டும் தெரிய வருகிறது.
#Day42 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 12, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/pgtkbzxEqe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout