முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: கமல்ஹாசன், விஜய் இரங்கல் செய்தி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமான நிலையில் அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியா தனது மிக முக்கியமான அரசியல் மற்றும் அறிவியல் மேதை ஒருவரை இழந்துள்ளது. டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவு இந்திய அரசியலில் ஒரு காலத்தின் முடிவை குறிக்கிறது. அமைதியான கண்ணியத்தை உடைய ஒரு மனிதராக, அவர் தன்னுடைய பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளின் மூலம் நாட்டை மறு சீரமைத்தார்.
நாட்டின் நடைமுறையில் இவ்வளவு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் மிகக் குறைவானவர்களே. நிதி அமைச்சராகவும் பிரதமராகவும் அவர் மேற்கொண்ட கொள்கைகள் கோடிக்கணக்கான மக்களை வலுப்படுத்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை தளத்தை உறுதிப்படுத்தின. மிகவும் பின்தங்கிய மக்களை உயர்த்தும் பணியை அவர் செய்தார். அவரது ஆட்சி இணக்கமான வளர்ச்சி மற்றும் சமூகநீதி ஆகியவற்றின் மீது ஆழ்ந்த அர்ப்பணிப்பால் முத்திரையிட்டது, இந்திய முன்னேற்றம் சமுதாயத்தின் ஒவ்வொரு மூலையில் உள்ளவர்களையும் சென்றடையும் என்பதை உறுதிப்படுத்தியது.
அவரின் பாரம்பரியம் இந்திய வரலாற்றின் அத்தியாயங்களில் நிலைத்து நிற்கும், நாட்டின் பாதையை அமைதியாக மாற்றிய தலைவராக நினைவு கூரப்படும். அவரது குடும்பத்தாருக்கும், இந்தியாவின் இந்த சிறந்த மகனின் இழப்புக்காக தேசத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜய் தனது இரங்கல் செய்தியில், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மகத்தான ஞானம், மற்றும் நேர்மையுடன் இந்தியாவை வழிநடத்தியவர். குறைவாக பேசி அதிகமாக செய்தவர்.
இந்திய பொருளாதாரத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பு மற்றும் தேசத்திற்கு அவர் செய்த உன்னதமான சேவைகளால் என்றென்றும் போற்றப்படுவார் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கடினமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, ஆதரவாளருக்கு மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
India has lost one of its most eminent statesmen and scholars. The passing of Dr. Manmohan Singh marks the end of an era in Indian polity. A man of quiet dignity, he reshaped the nation through his visionary economic and social policies.
— Kamal Haasan (@ikamalhaasan) December 27, 2024
Few have influenced the nation's… pic.twitter.com/ggvGroUaJt
Deeply saddened by the passing of former Prime Minister Dr. #ManmohanSingh.
— TVK Vijay (@tvkvijayhq) December 26, 2024
He led India with immense wisdom and integrity, who spoke less but did more. His unparalleled contribution to the Indian economy and other Noble Services to the Nation will forever be cherished.
My…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments