அப்பா-மகளா? நெருங்கிய நண்பர்களா? கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசனின் உரையாடல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் உரையாடும் வீடியோ ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் அப்பா மகள் உறவா? அல்லது நண்பர்களா? என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான ’இனிமேல்’ என்ற ஆல்பம் சமீபத்தில் வெளியானது என்பதும் கமல்ஹாசன் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த இந்த ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த ஆல்பத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் உரையாடும் வீடியோவின் புரமோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.
இருவரையும் பார்க்கும்போது அப்பா மகள் போல் தெரியவில்லை, நெருங்கிய நண்பர்கள் போல் தெரிகிறது என்று கமெண்ட்கள் பதிவாகி வரும் நிலையில் இதன் முழு வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான ’இனிமேல்’ என்ற ஆல்பம் சமூக வலைதளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று உள்ளது என்பதும் ஸ்ருதிஹாசன் பாடிய இந்த பாடலை அவரே கம்போஸ் செய்தார் என்பதும் இந்த பாடலில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது என்ற அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Legacy of Love : A Daughter's Heart-to-Heart with Her Father.
— Raaj Kamal Films International (@RKFI) April 26, 2024
Tomorrow at 11 am#Ulaganayagan #KamalHaasan #Inimel #InimelIdhuvey @ikamalhaasan @Dir_Lokesh @shrutihaasan #Mahendran @RKFI @turmericmediaTM@IamDwarkesh @bhuvangowda84 @philoedit #SriramIyengar @yanchanmusic… pic.twitter.com/wYYdSPJaiZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com