ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் கமல்.. கூடவே இன்னொரு பிரபலம்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Saturday,May 18 2024]

கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் பெங்களூரில் இன்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் வெல்லும் அணியே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதும் இன்றைய போட்டியை காண பல திரையுலக பிரபலங்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் இன்றைய போட்டியை மேலும் சிறப்பாக்க கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகிய இருவரையும் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியின் நேரடி ஒளிபரப்பின் போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தோன்ற உள்ளார்கள் என்பதும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த கிரிக்கெட் அனுபவங்களையும் ‘இந்தியன் 2’ படம் குறித்தும் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2’ படத்தின் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியை நேரடி ஒளிபரப்பை பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

 

More News

வெற்றிமாறன் அடுத்த படத்தில் கவின்.. டைட்டில் இதுதான்.. நெகட்டிவ் கேரக்டரில் பிரபல நடிகை..!

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் கவின் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே

விஜய்சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் .. மாஸ் வீடியோ ரிலீஸ்..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என்று நேற்றே அறிவிப்பு வெளியான நிலையில் சற்று முன்னர் டைட்டில் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தில் கேமியோ கேரக்டரில் பிரபல நடிகர்.. வேற லெவல் தகவல்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை 2' படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் சமீபத்தில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு மாஸ் நடிகரும்  கேமியோ   கேரக்டரில் இணைவதாக கூறப்படுகிறது.

LCUவுக்கு 'பிள்ளையார் சுழி' போட்ட லோகேஷ் கனகராஜ்.. ஒரே படத்தில் 4 படங்களின் கேரக்டர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் உள்ள கேரக்டர்களை வைத்து LCU குறும் படங்களை இயக்கி வருவதாகவும் இந்த குறும்படங்கள்

maira போச்சுன்னு நகர்ந்து வா.. கார்த்திக் குமாரின் 2வது மனைவியின் ஆவேச பதிவு..!  

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவி அம்ருதா ஸ்ரீனி