உருவாகிறது புதிய கூட்டணி: கமல்ஹாசன் - சரத்குமார் சந்திப்பு!
- IndiaGlitz, [Saturday,February 27 2021]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே இருப்பதால் கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று சரத்குமார் அதிரடியாக அறிவித்தார். இதன் பின்னர் புதிய கூட்டணியை அவர் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் கமல்ஹாசனை சரத்குமார் சந்தித்துள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த புதிய கூட்டணியில் ஏற்கனவே திமுகவில் இருந்து வெளியேறிய ஐஜேகே கட்சியும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் கட்சி, சரத்குமார் கட்சி, சீமான் கட்சி, அமமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கினால் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.