கமல்ஹாசன் - சல்மான்கான் திரைப்படம்.. ரூ.1000 கோடி வசூல் பட இயக்குனரின் மாஸ் திட்டம்..!

  • IndiaGlitz, [Tuesday,September 03 2024]

முதல் முறையாக கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் இணைந்து நடிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் உருவாக இருப்பதாகவும் சமீபத்தில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின் இயக்குனர் இதற்கான மாஸ் திட்டம் ஒன்றை தீட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கான், நயன்தாரா நடித்த ’ஜவான்’ என்ற திரைப்படத்தை அட்லி இயக்கிய நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் சல்மான் கான் படத்தை இயக்க இருப்பதாகவும் சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் இணைந்து நடிக்கும் படத்தை தான் அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

சல்மான் கான் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் ’இந்தியன் 2’ மற்றும் ’தக்லைஃப்’ தக்கலை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படங்கள் முடிவடைந்த உடன் சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.