close
Choose your channels

ஒரே படத்தில் கமல்ஹாசன் - சல்மான்கான்.. இயக்குனர் இந்த பிரபலமா?

Thursday, July 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய பிரபலங்களின் படங்களில் பாலிவுட் திரை உலக பிரபலங்கள் நடித்து வருகின்றனர் என்பதும் அதேபோல் பாலிவுட் திரைப்படங்களை தென்னிந்திய பிரபலங்கள் இயக்கியும் நடித்தும் வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பிரபல கோலிவுட் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ’ஜவான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது ரூ.1000 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் அட்லியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் ஆகிய இருவரும் இணைந்து நடிப்பதாகவும் இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் சல்மான்கான் நடிக்க இருப்பது குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக கசிந்து வரும் நிலையில் முதலில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கமல்ஹாசன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment