மருத்துவமனையில் இருந்து தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்: பிக்பாஸில் இன்னும் ஒரு ஆச்சரியம்!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே கமல்ஹாசன் குணமாகும் வரை இந்த நிகழ்ச்சியை வேறு யாராவது தொகுத்து வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று வெளியான செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது. அதில் மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் காட்சி உள்ளது. அது மட்டுமின்றி இன்னொரு ஆச்சரியமாக இந்த நிகழ்ச்சியை நாம் ஏற்கனவே கூறியபடி ரம்யா கிருஷ்ணனும் ஸ்டூடியோவில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் விரைவில் குணமாக வேண்டும் என பிக்பாஸ் போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த காட்சிகளும் இன்றைய முதல் புரமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.