தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: கமல்ஹாசன், ரஜினிகாந்த் கருத்து

  • IndiaGlitz, [Tuesday,May 22 2018]

தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. தூத்துகுடி கலெக்டர் அலுவலகத்திற்குள் 144 தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை நோக்கி தடியடி, கண்ணீர்ப்புகையை போலீசார் நடத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மீதும், தமிழக அரசு மீதும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் விரைவில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ள ரஜினிகாந்த், இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே கமல்ஹாசன் கூறியபோது, 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாக போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்துத் தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால் இப்பொழுது அரசின் ஆணையினால். அனைவரும் அமைதி காக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
 

More News

துப்பாக்கி சூடு சரிதான்: எச்.ராஜா

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவரது டுவிட்டரில் பதிவாகும் கருத்துக்களில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.

ஸ்டெர்லைட் வன்முறை: பற்றி எரிகிறது ஊழியர்களின் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் 

தூத்துகுடியில் இன்று காலை முதல் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து அதன் காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் பலி

தூத்துகுடி துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடந்து வரும் நிலையில் இன்றைய போராட்டம் வன்முறையாக வெடித்து

டிஜிட்டல் நிறுவனங்கள் சின்ன படங்களுக்கு கிடைத்த வரம்: பிரபல நடிகர்

கோலிவுட் திரையுலகில் சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சரியான தேதி கிடைப்பதில்லை,

கலவர பூமியாக மாறிய தூத்துகுடி: முதல்வர் அவசர ஆலோசனை

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 99 நாட்களாக போராடி வரும் நிலையில் இன்று 100வது நாளில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர்.