'கமல்ஹாசன் 234' படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Thursday,June 01 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல்ஹாசன் 234’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கமல்ஹாசன் விருது வழங்கும் விழாவில் ’இந்த படம் ’நாயகன்’ படம் போன்று இருக்கும் என்று கூறியதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக நயன்தாரா அல்லது த்ரிஷா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படத்தை வரும் தீபாவளி அல்லது பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இனிமேல் தான் காதலிக்க போகிறேன்': இன்று திருமணம் செய்யும் விஜய் டிவி பிரபலம்..!

விஜய் டிவி பிரபலத்திற்கு இன்று திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் எங்களது திருமணம் அரேஞ்ச் மேரேஜ் என்றும் இனிமேல் தான் என்னுடைய மனைவியை நான் காதலிக்க போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 

'தங்கலான்' படத்திற்காக இதையெல்லாம் கற்று கொண்டேன்: மாளவிகா மோகனன்..!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. கோலார் தங்க வயல் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் மீண்டும் வேதிகா .. இந்த பிரபல நடிகருக்கு ஜோடியா?

தமிழ் திரையுலகின் நடிகைகளின் ஒருவரான வேதிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதிலும் அவர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்

வருத்தப்படமா இதைச் செய்யுங்க… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எதை பரிந்துரைக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சுற்றுலா

இந்திய மருமகனாக மாறிய எலான் மஸ்க்… AI சேட்டையால் வைரலாகும் புகைப்படம்!

உலகப் பிரபலங்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது இந்திய மருமகனைப் போன்று உடையணிந்திருக்கும் புகைப்படம்