தள்ளி போகிறதா கமல்ஹாசனின் 'விக்ரம்'?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’விக்ரம்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட கமல்ஹாசன் ஓய்வு எடுத்து வருகிறார். ஓய்வுக்கு பின் அவர் மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இப்போதைக்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தை தொடங்குவதற்கு முன்னரே ஒரு படத்தை இயக்கி முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தின் முக்கிய நடிகராக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் பவானி என்ற கேரக்டரில் நடித்து கலக்கிய நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரஜினியின் அடுத்த படம்: மீண்டும் இணையும் இளம் இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் விரைவில்

வடிவேலு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி: வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து விளையாடினார் என்பதும் கடைசியாக வழங்கப்பட்ட

உத்தரகண்ட் பனிச்சரிவு விபத்து- தன் சம்பளத்தை நிவாரணமாகக் கொடுக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்து வரும் ரிஷப் பண்ட் நேற்று உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்து தனக்கு பெரும் வலியை கொடுத்தாகத் தெரிவித்து உள்ளார்.

170 பேர் மாயமான உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு… உயிரை உருக்கும் அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று திடீரென ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 170 தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்

'மணி ஹெய்ஸ்ட் 5' ரிலீஸ் எப்போது?

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் 'மணி ஹெய்ஸ்ட்' என்பதும் இந்த தொடரின் நான்கு பாகங்களுக்கும் ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே.