கமல்ஹாசன் - எச்.வினோத் திரைப்படம் டிராப்பா? என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் கமல்ஹாசனின் 233 வது திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ட்ராப் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’சதுரங்க வேட்டை’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’நேர்கொண்ட பார்வை’, ’வலிமை’, ’துணிவு’ ஆகிய படங்களை இயக்கியவர் எச் வினோத். இவர் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் 233 வது திரைப்படத்தை அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக இயக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படம் ட்ராப் என தெரிகிறது. எச் வினோத் கூறியது போலீஸ் கதை என்றும் ஏற்கனவே பல போலீஸ் கதைகளில் கமல்ஹாசன் நடித்து விட்டதை அடுத்து இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று அவர் மறுத்து விட்டதாகவும் இதனை அடுத்து எச் வினோத் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எச் வினோத் அடுத்ததாக ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணியை அவர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments