கமல் கேட்ட கேள்விக்கு நயன்தாரா, சிம்ரன் என பதில் சொன்ன ஜிபி முத்து: வேற லெவல் ஃபெர்பார்ம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசன் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. அவர் செய்யும் காமெடி மற்றும் சென்டிமென்ட் காட்சிகளை ரசிகர்கள் ரசித்து வருவதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து உள்ளனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகும் வகையில் ஜிபி முத்துவிடம் செல்லமாக வம்புக்கிழுத்து வருகிறார் என்றதும் நேற்றைய நிகழ்ச்சியில் கூட ஜிபி முத்துவிடம் ஆதாம் குறித்து கேள்வி கேட்டு கலாய்த்தார் என்பதும் நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் கமல்ஹாசன் மீண்டும் ஜிபி முத்துவை கலாய்க்கிறார். முதலில் ’முத்து அவர்களே உங்களுக்கு ஒரு பொருள் ஒன்று காத்திருக்கிறது’ என்று கூற அந்த பொருள் முருங்கைக்காய் என்பது தெரிந்தவுடன் ஜிபி முத்து உள்பட அனைவரும் சிரிக்கின்றனர்.
இந்த நிலையில் ஜி பி முத்துவிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. எந்த இரண்டு கதாநாயகியுடன் நீங்கள் நடிக்க விரும்புகிறீர்கள்? என கேட்டதற்கு நயன்தாரா மற்றும் சிம்ரன் என்று கூறுகிறார். அதை பார்த்த கேட்ட கமல்ஹாசன் ’எனக்கே நீங்கள் வேட்டு வச்சுருவிங்க போல’ என்று காமெடியாக கூறுகிறார்.
இதனை அடுத்து வீட்டுக்குள் இருப்பவர்களில் இரண்டு போட்டியாளர்களை நீங்கள் ஹீரோயினாக தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? என கமல்ஹாசன் கேட்க அதற்கு ஜிபி முத்து சுற்றும் முற்றும் பார்ப்பதுடன் இந்த புரமோ முடிவுக்கு வருகிறது. அவர் யாரை சொல்கிறார் என்பதை இன்றைய நிகழ்ச்சி பார்த்து தெரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Day7 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ek6uOyPMvc
— Vijay Television (@vijaytelevision) October 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com