பிரபலத்துடன் ஒற்றைக் காலில் நிற்கும் கமல்ஹாசன்.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல டான்ஸ் மாஸ்டர் உடன் ஒற்றைக் காலில் நிற்கும் புகைப்படத்தை உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மட்டுமின்றி அவர் ஒரு சிறந்த நடன கலைஞர் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் அவர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரை உலகில் உள்ள முன்னணி நடன இயக்குனர்கள் பலர் கமல்ஹாசனுடன் இன்றும் நெருங்கிய நட்பில் இருக்கிறார்கள் என்பதும் அந்த வகையில் பிரபுதேவா, ராஜு சுந்தரம் அவர்களின் தந்தையார் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் அவர்களின் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துடன் ஒற்றை காலில் நின்றபடி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசன் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:
”அண்ணாத்தை ஆடுறார்” அபூர்வ சிங்கீதம் , நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு. சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக் காலில் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments