உலக நாயகன் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Thursday,November 24 2022]
உலக நாயகன் கமல்ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று ஐதராபாத் சென்று பழம்பெரும் இயக்குனர் கே விஸ்வநாத் அவர்களை சந்தித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலான நிலையில் ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசனுக்கு லேசாக காய்ச்சல் இருப்பதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியானதிலிருந்து அவரது ரசிகர்கள் மற்றும் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர் விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.