கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை! தொண்டர்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பக்கம் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் அரசியல் பணிகள் என இந்த வயதிலும் பிசியாக இருக்கும் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக நம்மவர் அவர்களின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அம்முறிவினை சரி செய்வதற்காக அறுவை. சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொறுத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் தலைவர் அவர்களுக்கு இருந்த. தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல்தள்ளிப்போய்க்கொண்டிருந்தது.
மருத்துவர்களின் ஆலோசனையின்படி நம்மவர் கமல்ஹாசன் அவர்களுக்கு வரும் 22/11/2019 அன்று அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கின்றது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்விற்குப்பின் நம்மவர் நம்மை சந்திப்பார் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்னும் சில வாரங்கள் அரசியல் பணிகள் மற்றும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments