இந்த தேர்தலில் கமல் ஓட்டு போட மாட்டாராம். ஏன் தெரியுமா?
- IndiaGlitz, [Friday,April 29 2016]
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெறவேண்டும் என தேர்தல் ஆணையம் தீவிரமாக முயற்சி செய்து, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலில் கமல் ஓட்டு போட மாட்டேன் என்று கூறியுள்ளார். 'சபாஷ் நாயுடு' படத் தொடக்கவிழாவில் இதுகுறித்து கமல் கூறியதாவது: 'எனது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு, மே 16ம் தேதி தொடங்குகிறது. அதனால் ஷூட்டிங் போய்விடுவேன். இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிக்கு போனபோது என் வாக்கினை வேறு யாரோ போட்டுவிட்டு சென்றனர். இந்த முறை வாக்களிப்பதற்காக கேட்டேன். வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இத்தனைக்கும் தேர்தல் கமிஷன் அதிகாரி என் நெருங்கிய நண்பர். இருந்தும் என்ன செய்வது?" என்று வருத்தத்துடன் கூறினார்.
மேலும் தனது ரசிகர்கள் குறித்து கமல் கூறியபோது, "முதலில் என் ரசிகன் எனது அலுவலகத்திற்கு வரும்போது, செருப்பை கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரச்சொல்லுவேன். அதுபோல, திரும்ப செல்லும் போது, அந்த செருப்பை மாட்டிக்கொண்டு செல் என்று சொல்லுவேன். அதற்காக நான் செருப்பு என்று சொன்னதை தவறான உவமையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னிடம் அரசியல் கொண்டு வர வேண்டாம். என்னுடைய நற்பணி இயக்கங்களுடன் சேர்ந்து தொண்டு செய்வதே போதும்' என்று கூறினார்.