கமல்ஹாசனின் அடுத்த பட அறிவிப்பு: யாரும் எதிர்பாராத திருப்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் அடுத்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை எச்.வினோத் இயக்க இருப்பதாகவும் இந்த அறிவிப்பு தான் இன்று மாலை வெளியாக இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை மணிரத்னம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’நாயகன்’ திரைப்படம் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் 35 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இரு ஜாம்பவான்களும் ஒரே படத்தில் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் 2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் 234வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
THE TWO LEGENDS ARE BACK AGAIN AFTER 35 YEARS! ????
— Red Giant Movies (@RedGiantMovies_) November 6, 2022
PRESENTING #KH234 WRITTEN & DIRECTEd by #ManiRatnam @ikamalhaasan #ManiRatnam @Udhaystalin @arrahman #Mahendran @bagapath @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM pic.twitter.com/pJxldVGMqw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com